மனித மாமிசத்தால் உருவாக்கப்பட்ட ஆடை: எழுந்தது சர்ச்சை!

748

அவுஸ்திரேலியாவில் மனித மாமிசத்தால் உருவாக்கப்பட்டது போல் விற்பனை செய்யப்படும் ஆடைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்தவர்கள் கைலா அரினா மற்றும் டோபி பரோன். ஆடை வடிவமைப்பாளர்களான இவர்கள், அச்சம் தரும் வகையில் உடைகளை உருவாக்குவதில் வல்லவர்கள்.

இந்நிலையில், இவர்கள் தயாரித்துள்ள ஆடைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் விற்பனை செய்த ஆடைகள் மற்றும் தொப்பி, அணிகலன்கள் போன்ற பொருட்கள் மனித மாமிசத்தால் உருவாக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் இருந்துள்ளன.

இது சர்வதேச அளவில் பேசப்பட்ட விடயமாக மாறியது. பெரும்பாலோனோர் அரினா மற்றும் பரோன் ஆகியோர் ‘Serial Killers’ எனவும், அவர்கள் மனிதர்களை கொன்று தான் இந்த ஆடைகளை உருவாக்கியுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அரினா- பரோன், வழக்கமாக பயன்படுத்தும் விலங்குகளின் தோலைத்தான் பயன்படுத்தியிருப்பதாகவும், விற்பனை யுக்திக்காகவே அவற்றில் மனித முகங்கள், உறுப்புகள் இருப்பது போன்று வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆடைகளின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது. உண்மையில் இவர்கள், லெதர் குறித்த ஆய்வினை பல நாட்கள் மேற்கொண்டுள்ளனர்.

பல நாட்கள் முயற்சிக்கு பிறகு, வழக்கமாக பயன்படுத்துகிற லெதரில் சிலிகான் மற்றும் லேடெக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி, மனித உறுப்புகளைப் போல வடிவமைத்திருக்கிறார்கள்.

ஆடைகள் மட்டுமின்றி ஐபோன் Cover, Light Cover, Purse என பல்வேறு பொருட்களையும் இதே போல தயாரித்திருக்கிறார்கள். இவர்களின் தயாரிப்பிலேயே மிகவும் புகழ்பெற்றது ‘எட் ஜின்’ என்ற பெயர் கொண்ட ஜாக்கெட் தான்.

ஏனெனில், எட் ஜின் என்பவர் உண்மையில் ஒரு Serial Killer. அவர் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டில் மனிதக்கறி இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார். அதனால், இந்த ‘எட் ஜின்’ ஜாக்கெட்டில் மனித முகம் மற்றும் உறுப்புகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.