பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள ரெடி: நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு!!

254

நடிகர் பிரபுதேவாவை எனக்கு பிடிக்கும், அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என நடிகை நிகிஷா பட்டேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். பாண்டிமுனி எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஹீரோக்களில் பலரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் நட்பாக பழகுகிறோம்.

அவரை திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.திடீரென்று பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் என்று நிகிஷா பட்டேல் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அவர் சட்டப்படி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.