பாத்ரூமில் டேட்டிங்: டொனால்டு டிரம்ப்- மெலேனியாவின் சுவாரசிய காதல் கதை!

943

அமெரிக்காவின் தொழிலதிபரும், அரசியல்வாதியும், 45வது ஜனாதிபதியாகவும் பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப்.இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், மூன்றாவது மெலானியாவை காதலித்து கடந்த 2005ம் ஆண்டு கரம்பிடித்தார்.

இவர்களுடைய சுவாரசியமான காதல் கதை,முதன்முதலில் நியூயார்க் நகருக்கு மெலானியா வந்தது அவரது பேஷன் ஷோ மற்றும் மொடலிங்கிற்கான கனவுகள் தான் காரணம்.

பல ஷோக்களில் கலந்து கொண்ட இவர் ஒரு பேஷன் ஷோ பார்ட்டியின் போதுதான் டிரம்பை சந்தித்திருக்கிறார், அப்போது டிரம்ப் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் மட்டுமே.

1998ஆம் ஆண்டு பேஷன் வீக் நடத்திய போட்டியில்தான் முதல் முறையாக மெலானியாவும் ட்ரம்பும் சந்தித்து கொள்ள காரணமாக இருந்தது.அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே 24 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தது, டிரம்பிற்கு 54 வயது மற்றும் மெலானியாவிற்கு அப்போதுதான் 28 வயது ஆகி இருந்தது.

பார்த்தவுடன் டிரம்பால் வசீகரிக்கப்பட்ட மெலானியா அவரது முதல் சந்திப்பிலேயே டிரம்பிடம் ஒரு வலுவான கெமிஸ்ட்ரி மற்றும் எனர்ஜி இருந்ததை கண்டுகொண்டிருக்கிறார்.

அதைப்போலவே மெலானியாவை பார்த்தவுடனே ஈர்ப்படைந்த டிரம்ப் அவரிடம் அவரது தொலைபேசி எண்ணை கேட்டுள்ளார், மெலானியாவோ டிரம்பின் எண்ணை வாங்கியிருக்கிறார்.இவர்களது முதல் டேட் சந்திப்பு மிக சுவாரசியமானது, இவர்களது முதல் டேட் நடந்த இடம் பாத்ரூம் என சொல்லப்படுகிறது.

பார்த்த உடனேயே டேட்டிங் செய்த காதலர்களுள் டிரம்ப் மெலானியா ஜோடியும் அடக்கம். ஆரம்ப கட்ட நாட்களில் டிரம்ப் மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை என்றும் அவரது தோழிகளிடம் இது பற்றி பகிர்ந்து கொண்டது பற்றியும் 2016ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பெட்டியில் மெலானியா கூறியிருக்கிறார்.

ஆனால் அதன்பின் டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்திய காதலின் ஆழம் மூலம் ஏழு ஆண்டுகள் டேட்டிங் செய்த பின் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

2000 ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேளைகளில் ட்ரம்ப் பிஸியாக இருந்த நேரத்தில் இவர்களிடையே பிரிவு ஏற்பட்டிருக்கிறது.அப்போது பத்திரிகை பேட்டி ஒன்றில் மெலானியா சிறந்த பெண்மணி, அவரை தான் மிஸ் செய்வதாக டிரம்ப் மனம் திறந்து கூறியுள்ளார், அதன்பின் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர்.

அதன் பிறகு ஏறக்குறைய ஐந்தாண்டுகள் தொடர்ந்து டேட்டிங் செய்த பிறகு 2004ம் வருடம் ஏப்ரல் மாதத்தில், 1.5 மில்லியன் டொலர் மதிப்புடைய வைர மோதிரத்தை மெலானியாவிற்கு அணிவித்து தன் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.

இதை தொடர்ந்து 2005ம் வருடம் ஜனவரி 22ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிளோரிடாவின் பாம் பீச்சில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யும்போது டிரம்பிற்கு 58 வயது, மெலானியாவிற்கு 34 வயது.

இதன் மூலம் டிரம்பின் மூன்றாவது மனைவியானார் மெலானியா. இவானா மற்றும் மார்லா ஆகியோருடனான திருமண வாழ்வு முடிவுக்கு வந்தபின் மூன்றாவதாக மெலானியாவை தன் மனைவியாக்கி கொண்டார்.

தேனிலவுக்கு மார் ல லாகோ என்கிற தனது சொந்த ரிஸார்டுக்கு மனைவியை அழைத்து சென்ற டிரம்ப் , மறு வருடமே பாரன் டிரம்ப் என்கிற மகனுக்கு தந்தையானார்.

தங்களது வெற்றிகரமான உறவின் ரகசியமாக டிரம்ப் குறிப்பிடுவது, தங்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

மெலானியா இவரைஸ்ட்ரெஸ்-ஃப்ரீயாக இருக்கும்படி பார்த்து கொள்வதில் வல்லவர் என்றும், மெலானியா உடனான உறவு மிக இணக்கமான முறையில் நடைபெறுவதாகவும் ஒருமுறை கூறியுள்ளார்.

மேலும் குழந்தை வளர்ப்பு மற்ற விஷயங்கள் அனைத்தையுமே கவனித்து கொள்வது மெலானியாதான் என்றும், தனது வேலை பணம் தருவது மட்டுமே என்று கூறி மெலானியாவின் பொறுப்பான தன்மைக்கு புகழாரமும் சூட்டியிருக்கிறார்.

2017ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோதும் அதன் பின்னான சர்ச்சைகளின் போதும் மெலானியா உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஆனால் அமெரிக்காவின் முதல் பெண் ஆவது குறித்து அவர் சற்று யோசித்துதான் முடிவெடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது, எனினும் இத்தகவலை டிரம்ப் மறுத்திருக்கிறார்.

இருப்பினும் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு சென்ற ஐந்தாறு மாதங்களுக்கு பின்தான் மெலானியா முதல் பெண்மணியாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.