உலகில் முதல் முறையாக நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

593

ஹொங்ஹொங்கில் வாழும் பெண் ஒருவரின் செல்லப்பிராணியான நாய் ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Yvonne Chow Hau Yee என்ற அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளது. எனவே, மனிதர்களிடமிருந்து நோய் தொற்றிய முதல் விலங்காக அந்த நாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

Yvonne, தனது பொமரேனியன் வகை நாயை விலங்குகள் நல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அதன் உடலிலிருந்து மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டதில், அந்த நாயின் உடலில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால், அதற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. என்றாலும், 14 நாட்களுக்கு அந்த நாய் தனிமைப்படுத்தப்பட உள்ளது.

மீண்டும் மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, அதன் உடலில் வைரஸ் முற்றிலுமாக இல்லை என்பது தெரியவந்தபின்னர் அந்த நாய் விடுவிக்கப்படும்.

(சும்மாவே விலங்குகளை கோரமாக கொ லை செய்தார்கள் சீனர்கள், இந்த தகவல் தெரிந்தால் என்ன செய்யப்போகிறார்களோ தெரியாது.)