இலங்கையில் கொரோனா வைரஸ் : மேலும் 3 நாட்கள் விடுமுறையை அறிவித்தது அரசாங்கம்!!

631

மேலும் 3 நாட்கள் விடுமுறை

உலகளாவிய ரீதியில் மக்களை பாதித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் நேற்றைய தினம் விடுமுறையை அறிவித்த இலங்கை அரசு மேலும் 3 நாட்களுக்கு நீடித்துள்ளது.

அத்தியாவசிய சேவை மற்றும் வங்கிச்சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி, 17,18,19ம் திகதிகளுக்கு அரசாங்கம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, போக்குவரத்து, வங்கி, அத்தியாவசிய சேவைகள், மாவட்ட, பிரதேச செயலக அலுவலகங்களுக்கு விடுறையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 28 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நேற்றைய தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.