கொடிய விஷத்தால் பயமுறுத்தும் கொடூர பாம்புகள் : கடித்தால் உயிர் பிழைப்பதே அதிசயம்!

576

பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தைக் கொண்டது. அந்த விஷங்கள் உடலில் சென்றால், உயிர் பிழைப்பதே மிகவும் கடினம்.அதே சமயம் சில பாம்புகள் விஷத்தன்மை இல்லாமல் இருக்கும். ஆகவே செல்லப் பிராணிகளை விரும்புபவர்களுள் சிலர், பாம்புகளையும் செல்லமாக வளர்ப்பார்கள்.

உலகில் பல வகையான பாம்புகள் உள்ளன. அவை அனைத்துமே வெவ்வேறு நீளத்தைக் கொண்டவை. சில பாம்புகள் பார்க்கும் போதே பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதிலும் அவை அதன் நீளத்தால் தான் அனைவரையும் பயமுறுத்தும்.

அவற்றில் உலகிலேயே பெரிய பாம்பு தான் பைதான் (Python). இதில் பல வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளத்தில் வளரக்கூடியது. இப்போது உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் நீளமான பாம்புகள் எவையென்று பார்ப்போம்.

ரெடிகுலேட்டட் பைத்தான் (Reticulated Python):இந்த பாம்பு 7-10 மீட்டர் நீளம் இருக்கும். இது தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் இருக்கும். இது தான் உலகிலேயே மிகவும் நீளமான பாம்பு. ஆனால் இது விஷமில்லாதவை.

பச்சை அனகோண்டா (Green Anaconda):இந்த பச்சை அனகோண்டா 8.5 மீட்டர் நீளம் வளரக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இதற்கு மேலேயும் வளரக்கூடியது என்றும் ஒரு ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்பதால், இதன் முழுமையான வளர்ச்சியை சரியாக பாதுகாத்து பார்க்க முடியவில்லை.

இந்தியன் பைதான் (Indian Python):அடர்ந்த ப்ரௌனில் மஞ்சள் அல்லது வெள்ளை கலந்து காணப்படுவது தான் இந்தியன் பைதான். இது 7.6 மீட்டர் நீளம் வளரக்கூடியது.

டைமண்ட் பைதான் (Diamond Python):இந்த பாம்பு தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும். இது 6.4 மீட்டர் வளரக்கூடியது.கரு நாகம் (King Cobra):மிகவும் விஷத்தன்மை வாய்ந்த கரு நாகம் 5.8 மீட்டர் நீளம் வளரக்கூடியது.