கொரோனா : விதியை மீறிய வெளிநாட்டினருக்கு கொடுத்த வித்தியாசமான தண்டனை!!

891

கொரோனா..

இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த மாதத்தின் இறுதியில் ஊரடங்கு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊரடங்கு சட்டம் இன்னும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டில் இருக்கும் மாநில முதலமைச்சர்கள் பலரும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் வலியுறுத்துவதன் காரணமாகவும்,

நாட்டிலும் சீரான வேகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வதன் காரணமாகவும் பிரதமர் மோடி ஊரடங்கை இன்னும் சில நாட்கள் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உத்திரகாண்டின் Rishikesh-ல் இருக்கும் பிரபலமான ஆன்மிக ஆஷிரமம் ஒன்றிற்கு மெக்சிகோ, அவுஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த வெளிநாட்டினர் சென்றுள்ளனர். நாட்டில் தற்போது அத்தியாசவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும்.

தேவையில்லாமல் வரக் கூடாது என்ற விதி உள்ளது. இவர்கள் அந்த விதியை மீறியதன் காரணமாக அங்கிருந்த பொலிசார் இவர்களை பிடித்து விசாரித்து, இப்படி தேவையில்லாமல் வரக் கூடாது என்று அறிவுரை கூறியதுடன், 500 முறை மன்னித்துவிடுங்கள் என்று எழுதும் படி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளனர்.

அங்கு விதியை மீறுபவர்களுக்கு தொப்புகரணம் போட சொல்வது, சிறிது நேரம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாதையை சாலையில் பிடித்து நிற்பது போன்ற பல வித்தியாசமான தண்டனையை பொலிசார் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஏரியாவில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் விதியை மீறினால் இதே போன்று ஏதேனும் வித்தியாசமான தண்டனை தான் என்று அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி Vinod Sharma என்பவர் கூறியுள்ளார்.