சடலத்தை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் : கொரோனாவால் நடக்கும் துயரம்!!

621

கொரோனாவால் நடக்கும் துயரம்..

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொ டுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால், சாதரண மக்கள் சாப்பாடடிற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் சாப்பாடு இல்லாமல் உயிரிழக்கும் நிலைகளும், ஒரு சிலர் குப்பைகளில் கிடக்கும் பொருட்களை எடுத்து சாப்பிடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமாரெட்டி மாவட்டத்தில் இருக்கும் ரயில் நிலையத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து தனியாக வசித்து வந்தவர் மஹா ராஜூ வெங்கடராஜூ.

ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் வேலை கிடைக்காமல் திண்டாடிய வெங்கடராஜூ, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் பசிக்கொடுமையால் இருந்தவர் சாலையோரத்தில் படுத்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிசார் உடனடியாக சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தனியார் வாகனம் மூலம் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பொலிசார் எடுத்த முயற்சிக்கும் கொரோனா அச்சம் காரணமாக பலன் கிடைக்கவில்லை.

இதனால் வேறு வழி இல்லாமல் ரயில்களில் அநாதையாக மரணம் அடைந்த நபர்களின் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்யும் ராஜூ என்பவரின் உதவியை பொலிசார் நாடினர்.

இதையடுத்து அவர் வெங்கடராஜூவின் சடலத்தை ஒரு துணியில் சுற்றி சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.