காதல் கணவருக்காக பெண்கள் கட்டிய தாஜ்மஹால்கள்….எங்கு உள்ளது தெரியுமா?

649

மனைவிக்காக கணவன் கட்டிய கட்டிடத்தின் சிறப்புகள் பற்றி நாம் அறிந்துள்ளோம்.அதன் அடிப்படையில் பெண்கள் தங்களின் கணவருக்காக இந்தியாவில் கட்டிய உலகை வியக வைக்கும் அதிசயங்கள் இதோ,

விருபக்சா கோவில்:கர்நாடகவில் புகழ்பெற்ற விருபாக்சா கோயில், பட்டக்கல் என்ற இடத்தில் உள்ளது. கிபி 740-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பல்லவ மன்னர்களுடன் நடைபெற்ற போரில் வெற்றி அடைந்த இரண்டாம் விக்ரமாதித்யனின் வெற்றி சின்னமாக அவரது மனைவி இந்த கோவிலை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹிமாயூனின் கல்லறை:டில்லியின் முக்கிய சுற்றுலாத் தளமான ஹிமாயூனின் கல்லறை, பெர்சியன் கட்டிடக்கலையின் படி கட்டப்பட்டது. இந்த அழகான கல்லறையை முகலாய மன்னர் ஹிமாயூனின் மரணத்திற்கு பின் அவரது மனைவி கட்டியுள்ளார்.


ராணி கி வாவ்:சோலங்கி வம்சத்தின் அரசரான பீம் தேவ், என்பவருக்காக அவரது மனைவி உதயமதி ராணி, 1063-ல் ராணி கி வாவ் எனும் கட்டிடத்தை கட்டியுள்ளார். 64 மீ நீளம் மற்றும் 27 மீ அகலத்தைக் கொண்டுள்ள இந்த கட்டிடம் யுனெஸ்கோவால் உலக சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


மிர்சான் கோட்டை:உத்தர்கண்ட் மாநிலம் உத்தர்காசியில் அமைந்துள்ள இந்த மிர்சான் கோட்டை, சென்னபைரவி எனும் பெயருடைய ஒரு பெண்ணால் தனது கணவனுக்காக கட்டப்பட்டது.


லால் தர்வாசா மசூதி;ஜான்பூரில் 1447-ல் கட்டப்பட்ட இந்த மசூதி சயீத் அலி தாவூத் குட்புதீன் என்பவருக்காக அவரது மனைவி ராஜி பிபி இதைக் கட்டியுள்ளார்.


மோகினீஸ்வரர் சிவாலயம்:துல்மார்க் மலைகளின் மீது அமைந்துள்ள இந்த சிவாலயம், 1915-ல் ராஜா ஹரி சிங் என்பவருக்காக அவரது மனைவி மகாராணி மோகினி பாய் சிசோடியா என்பவர் கட்டியுள்ளார்.


காயிர் அல் மலாஸ்:1561-ல் அக்பரின் அரசவையில் மிக பலம் கொண்ட மகா அங்கா எனும் பெண், முகலாய பேரரசர் அக்பருக்காக இந்த கட்டிடத்தை எழுப்பியுள்ளார்.