3 நாட்கள் தொடர் நடை பயணம் : வீடு வந்தடைய ஒரு மணிநேரத்திற்கு முன் 12 வயது சிறுமிக்கு எற்பட்ட பரிதாப நிலை!!

533

சிறுமிக்கு எற்பட்ட பரிதாப நிலை..

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், 12வயது சி றுமி சொந்த ஊருக்கு 3நாட்கள் தொடர்ந்து நடந்து சென்ற நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த 14ஆம் திகதி தளர்த்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மே 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து பலரும் சொந்த ஊர்கள் நோக்கி மீண்டும் படையெடுக்கு துவங்கினர்.

இந்நிலையில், சதீஷ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது சி றுமி ஒருவர், தெலுங்கான மாநிலத்தில் உள்ள மிளகாய் விவசாய பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தனது சொந்த ஊருக்கு திரும்ப அங்குள் பணியாளர்களுடன் புறப்பட்டுள்ளார். 3நாட்கள் சரியான உணவு உறக்கம் இன்றி 150 கிலோமீற்றர் நடந்துள்ளனர்.

வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 14 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் போது அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு ம யங்கி வி ழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள், அவருக்கும் நீரிழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அதில், எதிர்மறை முடிவுகளே வந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

அந்த குடும்பத்தினருக்கு 1லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது போன்று, பல மாநிலங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களை நோக்கி கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.