கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்கவில்லை : ராஜ நாகத்தை கொன்று வாழை இலையில் விருந்து தயார் செய்த இளைஞர்கள்!!

633

கொரோனா ஊரடங்கால்..

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என கூறி மூன்று பேர் காட்டில் இருந்த ராஜ நாகத்தை கொன்று விருந்துக்கு தயாரான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வேட்டைக்காரர்கள் கும்பல் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. அதில் மூன்று பேர் தங்களின் தோள்கள் மீது 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை கொன்று வைத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், காட்டுக்குள் சென்று ராஜ நாகத்தை கொன்றோம்.

கொரோனா ஊரடங்கால் எங்களுக்கு உணவு மற்றும் இறைச்சிகள் கிடைக்கவில்லை. அதனால் தான் இப்படி செய்தோம் என கூறியவாறு நாகத்தை வாழை இலையின் மீது வைத்து விருந்துக்கு தயாராகிறோம் என கூறினர்.

ஆனால் மாநிலத்தில் உணவு பஞ்சம் இருப்பதாக கூறப்படுவதை அருணாச்சல பிரதேச அரசு மறுத்துள்ளது. போதுமான அளவு அரிசி உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளதாகவும், ஏழைகளுக்கு ரேஷன் மூலம் இலவசமாக கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ராஜ நாகத்தை கொன்றவர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.