உங்கள் பெயர் M என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? அப்போ இது உங்களுக்கு தான்!

688

உலகில் ஒருவர் பிறந்தவுடன், அவரது குணாதிசயங்களை ஏராளமான விஷயங்கள் தெரிவிக்கின்றன. அதில் பிறந்த நேரம் முதல், பெயர் வரை ஒவ்வொன்றும் ஒருவரின் குணம் எப்படி இருக்கும் என்பதைக் குறிக்கும்.M என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது குணங்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்க்கலாம். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், பாதுகாப்பு உணர்வைத் தருபவர்களாகவும் இருப்பார்களாம். மேலும் இவர்கள் வாழ்க்கையில் நடைமுறைக்கேற்றவர்களாக இருப்பார்களாம்.

இவர்களுக்கு எப்போதும் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பற்றிய யோசனை இருக்கும். மேலும் தங்களது வாழ்வில் புதிய விஷயங்களை முயற்சிக்க சற்றும் தயக்கம் கொள்ளமாட்டார்கள்.

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், தங்களது கலாச்சாரம், பாரம்பரியம், தார்மீக நெறிமுறைகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவர்கள் அதிக தன்னம்பிக்கைக் கொண்டவர்கள், இதனால் வாழ்வில் நிறைய வெற்றிகளை காண்பார்கள். பொதுவாக இவர்கள் வேலை சார்ந்த மக்கள் மற்றும் இவர்கள் செய்யும் அனைத்திற்கும் மனதில் திட்டம் போட்டு தான் செய்வார்கள்.

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் ஒழுக்கமானவராகவும், நேர்மையானவராகவும் இருப்பார்களாம். மேலும் இவர்கள் நம்பத்தகுந்தவர்களாக இருப்பர்.

இந்த வகை மக்கள் தான் வகுத்த எல்லையை ஒருவர் மீறும் போது ஆக்கிரோஷமாகி கொந்தளிப்பார்கள். மேலும் இவர்களது பொறுமையை மட்டும் சோதித்துப் பார்க்க நினைத்தால், அவர்களது கதி அவ்வளவு தான்.

இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு விரைவில் முடிவு எடுக்கமாட்டார்கள். நன்கு அலசி ஆராய்ந்து, முழு விவரத்தையும் தெரிந்த பின்பே எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள்.

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். முக்கியமாக மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இதனாலேயே இவர்களை காதலில் விழ வைப்பது என்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும்.

இந்த மக்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டதோடு, ரொமான்டிக்கானவர்களும் கூட. இது தவிர, இவர்கள் இயற்கையில் மிகுந்த கலைஞர்களாகவும், வாழ்க்கையில் நன்கு அனுபவித்தவர்களாகவும் இருப்பர்.

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிக்க எதையும் செய்வதோடு, ஆதரவாகவும் இருப்பார்கள்.