4வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் : லாவகமாக பிடித்த காவலாளி!!

1020

சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காவலாளி காப்பாற்றினார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சபரிநாதன் சென்னையை அடுத்த குமணன்சாவடியில் வசித்து வருகிறார். வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு வந்த சபரிநாதன் தற்கொலை செய்து கொள்வதற்காக நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அவர் தரையில் விழாமல் வணிக வளாக காவலாளி தேவசகாயம் காப்பாற்றினார். கீழே விழுந்த சபரிநாதனை பிடித்தபோது தேவசகாயத்துக்கு காலில் பலத்த அடிபட்டது. தேவசகாயத்தால் உயிர் பிழைத்த சபரிநாதனின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சபரிநாதன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவே தற்கொலை செய்து கொள்வதாக சபரிநாதன் 4 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். தேவசகாயத்துக்கு கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.