வனிதாவின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு: முதல் மனைவி பரபரப்பு பேட்டி….!

93

வனிதாவின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு…….

பிக்பாஸ் சீசன் 3 ன் போட்டியாளரும், நடிகை, இயக்குனருமான வனிதா அண்மையில் பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவ்விசயம் பலரின் பார்வைகளை வனிதாவின் பக்கம் இழுத்தது.

அதே வேளையில் பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் பீட்டர் பால் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன் கணவர் முறையான விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்துள்ளார் என புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் பீட்டர் விவாகரத்து செய்யாமல் யாரையும் திருமணம் செய்யமாட்டேன், அப்படி செய்தால் தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என எழுதி கொடுத்துள்ளதாக அப்பெண் கூறியுள்ளார்.

பீட்டருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது, இரு முறை அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தோம். நான் மகனின் படிப்பு காரணமாக என் அம்மா வீட்டில் இருக்கிறேன். என் மகள் அப்பா வேண்டும் என்கிறாள்

மேலும் பீட்டருக்கு சில வருடங்களாக வேறு பெண்ணுடன் தொடர் உள்ளது, எனக்கு என் கணவர் வேண்டும், விவாகரத்து அல்ல என கூறியுள்ளார்.

பீட்டர், எலிசபெத் ஜோடிக்கு 2 குழந்தைகள் இருக்கிறதாம்.