பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிக்கூடாது: இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

627

பெண்களுக்கு இதயநோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம்.இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து உள்ளது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைக்கப்படுவதால் கலோரியின் அளவை இறைச்சி உணவு அதிகரிக்கச் செய்யும்.

இதனால் பெண்களுக்கு இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பெண்கள் இறைச்சி உணவை தவித்து, காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சியை 75 முதல் 100 கிராம் வரை, பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடலாம்.

ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி அல்லது மீன் ஆகியவற்றை 75 முதல் 100 கிராம் வரை மதிய வேளையில் சாப்பிடலாம். இவற்றை இரவில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

நபர் ஒருவருக்கு 15 மில்லி லிட்டர் அளவு எண்ணெயே ஒரு நாளைக்கு போதுமானதாகும். எனவே, அதிக எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் ஓட்டல் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

இறைச்சி மட்டுமின்றி பிட்சா, கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் சாப்பிடுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வனஸ்பதி சேர்க்கப்படுவதால் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றால் உடல் பருமன் இதயநோய் ஆகியவை வர வாய்ப்புகள் அதிகம்.

இதயநோயை தவிர்க்க உணவுக் கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியும் செய்வது அவசியம். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெற்று இதயநோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.