என்னை ம ன்னிசுடுங்க… தெரியாமல் பண்ணிட்டேன்! இந்தியர்களிடம் ம ன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!!

325

இஸ்ரேல் பிரதமரின்……..

இந்து கடவுளான துர்கா தேவியின் படத்தை அ வமதிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமரின் மகன் இந்தியர்களிடம் ம ன்னிப்பு கேட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ உள்ளார். இவரது இளைய மகன் யெய்ர். 29 வயதான இவர் சமூக வலைதள பயன்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

தனது தந்தையின் அரசியல் கொள்கைகள் குறித்தும், எ திர்க்கட்சிகளை வி மர்சனம் செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை மீதான ஊழல் வழக்கு வி சாரணையில் எ திர்க்கட்சிகளை சாடும் விதமாக இந்து கடவுளான துர்கா தேவியின் படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் படத்தில் துர்கா தேவியின் முகத்துக்கு பதிலாக பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வக்கீலின் முகம் பொருத்தப்பட்டிருந்தது. அத்துடன் துர்கா தேவியின் கைகள் ஆ பாச சைகை காட்டுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

டுவிட்டரில் இது ச ர்ச்சையை கிளப்பியது. இந்தியர்கள் பலர் யெய்ரின் டுவிட்டர் பதிவில் கண்டன கருத்துகளை பதிவிட்டு எ திர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, தனது தவறை உணர்ந்த யெய்ர் ச ர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவை நீ க்கியதோடு இந்தியர்களிடம்  ம ன்னிப்பு கோரினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இஸ்ரேலிய அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கவும் கேலி செய்யவும் ஒரு புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டேன்.

ஆனால் அந்தப்படம் க ம்பீரமான இந்து நம்பிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு படம் என்பதை நான் உணரவில்லை. இந்திய நண்பர்களின் கருத்துகளில் இருந்து நான் அதை உணர்ந்தவுடன், அந்தப் ப திவை அ கற்றிவிட்டேன். நான் ம ன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.