3 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய பாசக்கார கணவர்..! திகைத்து நின்ற உறவினர்கள்!!

310

கர்நாடகா…….

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய சம்பவம் உறவினர்களை திகைக்க வைத்துள்ளது.

முடி ஏற்றுமதி செய்யும் வணிகத்தை நடத்தி வரும் 57 வயதான சீனிவாஸ் மூர்த்தி என்ற நபரே மறைந்த தனது மனைவியின் மீதுள்ள பாசத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி அனைவரையும் கலங்க வைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் சீனிவாஸின் மனைவி மாதவி இரண்டு மகள்களுடன் காரில் திருப்தி சென்ற கொண்டிருந்த போது லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், மாதவி சம்பவயித்திலேயே உயிரிழந்துள்ளார். சிறிய காயத்துடன் இரண்டு மகள்களும் உயிர்தப்பியுள்ளனர். மாதவியின் மறைவால் ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் கலங்கியுள்ளது.

இந்நிலையில், பங்களா வீடு கட்ட வேண்டும் என்ற தனது மனைவியின் கனவை நினைவாக்க சீனிவாஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடு ஒன்றை கட்ட முடிவெடுத்துள்ளார். மாதவியின் நினைவாக வீட்டை சிறப்பாக உருவாக்க அவர் 25 க்கும் மேற்பட்ட கட்டிடக் கலைஞர்களை அணுயுள்ளார்.

இறுதியில் புதிய வீட்டில் மாதவியின் மெழுகு சிலையை அமைக்கலாம் என மகேஷ் என்ற கட்டிடக் கலைஞர் வழங்கிய யோசனை சீனிவாஸனை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து, ஒரு வருடத்திற்கு முன் பெங்களூரு நகரில் பிரபலமான பொம்மை தயாரிப்பாளர்களான கோம்பே மானேயிடம் தனது மனைவியின் மொழுகு சிலையை உருவாக்க ஆர்டர் கொடுத்துள்ளார் சீனிவாஸ். புதிய வீடு ஜூலை மாதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 8ம் திகதி அனைத்து உறவினர்களையும் புதுமனை புகுவிழாவிற்கு சீனிவாஸ் அழைத்துள்ளார்.

விழாவில் கலந்துக்கொண்ட உறவினர்கள் அனைவரும் வீட்டிலிருந்த மாதவியின் மொழுகு சிலையை கண்டு திகைத்து போயுள்ளனர். மேலும், மறைந்த மனைவி மீது சீனிவாஸ் வைத்துள்ள பாசத்தை எண்ணி கலங்கியுள்ளனர்.

மாதவியின் மெழுகு சிலையுடன் சீனவாஸும் அவருடைய இரு மகள்களும் குடும்பமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் காண்போரை கலங்க வைத்துள்ளது.

பங்களா வீடு கட்ட வேண்டும் என்பது எனது மனைவியின் கனவாக இருந்தது. தற்போது இதில் வாழ அவர் இல்லை. இந்த சிலை அவர் இன்னும் இங்கே இருக்கிறார் என்பதை உணர்த்தும் என சீனாவஸ் தெரிவித்துள்ளார்.