5 வயது இருக்கும் போதே அந்த கொடுமையை அனுபவித்து விட்டேன் : தனுஷ் பட நடிகை ஓபன்டாக்!!

696

நடிகை பார்வதி

பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் மலையாள நடிகை பார்வதி. இதைத் தொடர்ந்து மரியான், உத்தமவில்லன் என ஹிட் படங்களில் நடித்தார்.

இந்நிலையில், இவர் பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளை குறித்து அதிகளவில் பேசி வருகிறார். இதன் காரணமாகவே, இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, பார்வதி தான் 4 அல்லது 5 வயதில் இருக்கும் போதே பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அதை அறிந்துகொள்ளவே அவருக்கு 17 வருடங்கள் ஆனதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது, இது குறித்து பேசவும் 12 வருடங்கள் ஆகியிருக்கிறது என பார்வதி கூறியுள்ளார்.