5 வருடங்களில் 8 குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்த நபர் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

704

5 வருடங்களில் 8 குழந்தைகளை துஷ்ப்ரயோகம் செய்த கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த் எனும் நகரில்தான் மேற்கண்ட பாலியல் குற்றம் நடந்துள்ளது.

மார்ட்டின் ஜேம்ஸ் கூப்பர் என்பவன் தனது மனைவியோடு 1978 முதல் 1983 வரை கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தான். அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் காக்கப்பட்டு இவர்களிடம் வந்து சேர்ந்தவர்கள்.

வார்மிண்டா தங்குமிடம் என்கிற பெயரில் நடத்தப்பட்ட அந்த காப்பகத்தில் தற்போது 66 வயதாகின்ற கூப்பர் 1978 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை மேற்கண்ட குழந்தை பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறான்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள கூப்பர் மீது 30க்கும் மேற்பட்ட குழந்தை துஷ்ப்ரயோக வழக்குகள் இருக்கின்றன.

ஏற்கனவே 8 குழந்தைகள் அதில் 4 நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் இவரால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தோழி ஒருவரால் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அத்தனை குழந்தைகளும் 11ல் இருந்து 16 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் இது பற்றி புகார் கூற முயலும்போதெல்லாம் கூப்பரால் மிரட்டப்பட்டுள்ளனர்.

குறும்பு செய்ததற்கான தண்டனை என்று ஒவ்வொரு முறையும் சிறு குழந்தைகளை லாக்கரில் வைத்து சீரழித்திருக்கிறான் கூப்பர். சிலரை காரில் வைத்தும் துஷ்ப்ரயோகம் செய்திருக்கிறான்.

குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டிய காப்பகத்துக்காரரே அவர்களை தனது காம பசிக்கு இரையாக்கியதை கண்டு பெர்த் நகரமே அதிர்ந்துதான் போனது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தான் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின் வேகமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பெழுதப் பட்டுள்ளது.

இப்போது 66 வயதாகும் கூப்பருக்கு டிமென்ட்ஸியா போன்ற மறதி போன்ற அனைத்து உடல்நல பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.

அருவெறுக்கத்தக்க நிகழ்வுகளை கூப்பர் நிகழ்த்தியதாகவும் பாதுகாக்க வேண்டிய குழந்தைகளை தனது காம பசிக்கு இரையாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்று தீர்ப்பு வாசிக்கும்போது நீதிபதி கூறினார்.

தீர்ப்பிற்கு பின் கோர்ட்டின் வாசலின் முன் இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் உடைந்து கதறினார். 40 வருடங்களாக இந்த நபரால் ஏற்பட்ட காயங்களை நான் தாங்கிக் கொண்டு வாழ்ந்தேன். ஆனால் இவனுக்கு 20 வருடங்கள் அது போன்ற நரக வாழ்வு கிடைத்துள்ளது என்பதால் தான் சிறிதளவு மட்டுமே இந்த தீர்ப்பால் சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்தார்.

20 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க போகும் சைக்கோ குற்றவாளியான மார்ட்டின் ஜேம்ஸ் கூப்பருக்கு 18 வருடங்கள் வரை பரோல் கூடக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.