5 வருசமா காதலிச்சிட்டு வந்த ஜோடி.. கடைசியாக காதலன் சொன்ன விஷயத்த கேட்டு உடைந்த இளம்பெண் எடுத்த முடிவு : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

1198

சென்னை….

ஏஞ்சல் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் எதிரெதிரே வீட்டில் வசித்து வந்ததால் இருவரும் நட்பாக பழகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, நாளடைவில் தனுஷ் மற்றும் ஏஞ்சல் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏஞ்சலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், ஏஞ்சலின் காதலரான தனுஷ் வேறொரு பெண்ணோடு பழகி வருவதாகவும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

தான் ஐந்து வருடங்களாக காதலித்து வரும் காதலன் பற்றி இப்படி ஒரு தகவல் கிடைத்ததும் குழம்பி போயுள்ளார் ஏஞ்சல். தொடர்ந்து, உடனடியாக இது பற்றி தனுஷிடமே நேரடியாக கேட்டுள்ளார். அப்போது, தன்னை பற்றி கிடைத்த செய்தியை மறுக்காத தனுஷ், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், என்னை மறந்து விடு என்றும் ஏஞ்சலிடம் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இரண்டு நாட்களாக மன உளைச்சலிலும் ஏஞ்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு சென்ற ஏஞ்சல், அவருடைய பெற்றோரிடம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதற்கான நியாயம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது மகனின் விருப்பம் என்றும் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் தனுஷின் பெற்றோர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தனது வீட்டிற்கு சென்ற ஏஞ்சல், அங்கே யாரும் இல்லாத நேரம் பார்த்து விபரீத முடிவை எடுத்து உயிரிழந்தார். வெளியே சென்றிருந்த ஏஞ்சலின் பெற்றோர், வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளின் நிலையைக் கண்டு கதறித் துடித்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஏஞ்சல் செல் போனை ஆய்வு செய்த போது, உயிரிழப்பதற்கு முன் ஏஞ்சல் பேசிய வீடியோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் பேசும் ஏஞ்சல், தன்னுடைய முடிவுக்கு நானே தான் காரணம் என்றும், காதல் தோல்வியால் காதலனை மறக்க முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்காக தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் ஏஞ்சல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் தன்னை விட்டு சென்றதால் இளம்பெண் எடுத்த முடிவு, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.