500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் : பொலிசில் சிக்கியது எப்படி?

747

காதல் மன்னன்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சமூக வலைதளங்களில் காதல்வலை வீசி 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகள்கள், சினிமா பிரமுகர்கள் வீட்டு பெண்களும் இவரது மோசடியில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார் என்பவரே பொலிசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர். வழுக்கை தலையுடன் இருக்கும் ராஜ்குமார் விக் வைத்து, தனது தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பல ஆண் விளம்பர மாடல்களின் புகைப்படத்தை பதிவேற்றியும் ராஜ்குமார் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இளம்பெண்கள் பலர் கற்பையும், நகை, பணத்தையும் இழந்த பின்னரே இவர் மோசடி மன்னன் என்பதை அறிந்து அலறியுள்ளனர். பணம் தர மறுத்ததால் தம்முடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

2016-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.