51 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த 61 வயது கணவர்!!

1026

பெரம்பலூர் மாவட்டத்தில் 61 வயது நடராஜன் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நடராஜனின் மனைவி அஞ்சலை (51). இவர்களது இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி சென்றுவிட்டனர்.

நடராஜன் – அஞ்சலை ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டதால், பழைய பேப்பர், பாட்டில்களை சேகரித்து, அதனை விற்று குடும்பம் நடத்தி வந்தார் நடராஜன்.

இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அக்கம் பக்கத்தில் இந்த வயதில் தன்னை சந்தேகப்படுகிறார், இதனால் அடிக்கடி தங்களுக்குள் சண்டை நடப்பதாக அஞ்சலை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நடராஜன், அஞ்சலையின் நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையை எடுத்து அஞ்சலையை தாக்கினார்.

இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் மங்களமேடு காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

பொலிசார் அஞ்சலையின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.