தொலைந்து போன ஆட்டுக்குட்டி தாயை தேடி ஓடும் அரிய காட்சி! மில்லியன் பார்வையாளர்களின் கண்களை குளமாக்கிய பாசம்!!

256

ஆட்டுக்குட்டி………

தொலைந்து போன ஆட்டுக்குட்டி ஒன்று தனது தாயுடன் மீண்டும் சேரும் காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான சற்று நேரத்திலேயே வைரலாகி விட்டது.

இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1,300-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

ஆட்டுக்குட்டி ஒரு குழியில் சிக்கி இருப்பதை கண்ட ஒரு குழுவினர் அதனை காப்பாற்றி குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.

குட்டியை மீட்ட குழுவினர் அந்த ஆட்டுக்குட்டியின் தலை மேல் உள்ள வெள்ளை ரோமங்களைக் கொண்ட ஆடுகளின் குழுவை கண்டுபிடித்து, எல்லா ஆடுகளுக்கு முன்னால் இந்த ஆட்டுக்குட்டியை தரையில் வைத்துள்ளனர்.

இறுதியில் அந்த குட்டியின் தாயைக் கண்டுபிடித்துள்ளனர். தாயும், சேயும் சேரும் அந்த அழகிய காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது