52 வயது பெண் 10வது முறை கர்ப்பம் : தலைமறைவான கணவர்!!

570

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆராயி என்ற 52 வயது பெண் 10 முறை கர்ப்பம் தரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மீதமுள்ள 8 குழந்தைகளில் 4 பேருக்கு திருமணம் நடந்துள்ளது.

இவர் தனது 9 குழந்தைகளையும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பெற்றெடுத்துத்துள்ளார், இந்நிலையில், 10 வது முறையாக ஆராயி மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பமான ஆராயி, சிங்கவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பதை கண்டறிந்தார். ஆராயிக்கு வரும் 18ம் தேதி பிரசவ தேதி என மருத்துவர்களுக்கு தெரியவந்தது. மருத்துவர் அய்யப்பன் தலைமையில் மருத்துவ குழுவினர் கடந்த 4ம் தேதி வேதியன்குடி சென்று ஆராயியை பரிசோதனை செய்தனர்.

குழந்தை நல்ல முறையில் பிறக்கவும், தாயின் உயிருக்கு எந்த ஆபத்து இல்லாமல் இருக்கவும் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் கணவர் ஆனந்தன், தனது மனைவி ஆராயியை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்குப் பயந்து தலைமறைவாகியுள்ளார். மருத்துவ குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆராயி மற்றும் அவரது கணவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மருத்துவர் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில், நாகுடி பொலிசார் வழக்கு பதிந்து ஆராயியை தேடி வருகின்றனர்.