மாஸ்க்கை கழட்டாமல் எப்படி சாப்பிடுவது?… பிரபல உணவகத்தின் அசத்தல் ஐடியா!!

288

முகக்கவசம்………..

மேற்கு வங்க மாநிலத்தில் உணவருந்தும் கடையில் இலவசமாக கொரோனா முன்னெச்சரிக்கைக்காக ஜிப் முகக்கவசம் அளிக்கப்பட்டு வருவது பரபரப்பாக பேச்சுப் பொருளாக இருந்தது.

மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இயங்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவருந்த வரும் வாடிக்கையாளருக்கு ஜிப் வைத்த முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த புதுவகை முகக்கவசம் வாடிக்கையாளரின் நலன் கருதி சாப்பிடும் போதும் முகக்கவசம் அணிந்திருக்குமாறு வாய் பகுதியில் மட்டும் ஜிப் வைத்து தைக்கப்பட்டுள்ளது என அந்த ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது வாடிக்கையாளரின் விருப்பத்தை சார்ந்ததேத்தாகும் எனவும், கட்டாயமாக கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.