குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என பூனையை வைத்து ட்ரயல் பார்த்த நபர்.. இணையத்தில் வைரல்!!

276

பூனை……………

கை குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என பூனையை வைத்து சோதனை செய்த நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆரம்பத்தில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.இந்த வீடியோவின் அழகே அந்த பூனை மிகவும் சமத்தாக அமர்ந்த வண்ணம் கேமராவை பார்ப்பது தான்.

வின் க்வாங் பாம் என்ற நபர் ஒருவர் தாத்தாவாக போவதால், அவர் தன்னுடைய மகனுக்கு ஒரு குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என்று இந்த வீடியோ மூலம் விவரித்து ஆச்சர்யபடுத்தியுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பூனையை கண்டு தான் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ முடியும் வரை தன்னை வளர்ப்பவர் சொல்லும் அனைத்தையும் அமைதியாய் பொறுமையாய் கேட்டுக் கொண்டு இருக்கிறது.