மூளை அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் பார்த்த 33 வயது இளைஞர்… வீடியோ காட்சி!!

333

இந்தியாவில்……….

இந்தியாவில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம்,கன்னடம் உட்பட பல மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சிக்கு என இரசிகர் பட்டாளம் ஏராளம்.

இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது நினைவு இழக்காமல் இருப்பதற்காக நோயாளிகளுக்கு மிகவும் பிடித்தமானவற்றை செயுமாறு மருத்துவர்கள் கூறுவர்.அந்த வகையில் நினைவை இழக்காமல் இருக்க ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துள்ளார்.

அத்துடன் அவதார் திரைப்படத்தையும் பார்த்துள்ளார்.அறுவை சிகிச்சை நடக்கும் போது அவர் லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இதுமாதிரியான அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிகள் வயலின் வாசித்தது, உணவு சமைத்தது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.