இளவரசர் ஹரியின் திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த குட்டி இளவரசி சார்லோட்!!

592

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் மணப்பெண் தோழிகளாக நின்றவர்களில் குட்டி இளவரசி சார்லோட் மிகவும் தைரியமாக அனைவரையும் எதிர்கொண்ட விதம் பாராட்டப்பட்டுள்ளது.

ஹரி – மெர்க்கல் திருமணத்தில் மணப்பெண் தோழியாக வந்த குட்டி இளவரசி சார்லோட், ஏனைய மணப்பெண் தோழிகள் மற்றும் தனது அண்ணன் ஜார்ஜ் என எல்லோரையும் விட மிகவும் தைரியமாக நடந்துகொண்டார்.

மணமகள் மெர்க்கலுக்கு பின்னால் நடந்துவரும்போது அண்ணன் ஜார்ஜ் தயங்கிகொண்டே வந்தாலும், குட்டி இளவரசி நம்பிக்கையோடு நடந்துவந்தார்.

தேவாலயத்தில் இருந்து மணமக்களை வழியனுப்பி வைக்கும்போது, உற்சாகமாக கையசைக்கிறார். ஆனால், குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது தந்தையின் பின்னால் மறைந்துநின்றபடி வெட்கப்பட்டுக்கொண்டே கையசைக்கிறார்.

இவரது இந்த நடவடிக்கைகள் புகைப்படக்காரர்களை மட்டுமல்லாமல், திருமணத்திற்கு வந்தவர்களையும் கவர்ந்துள்ளது.

Crown Act of 2013 சட்டத்தின்படி, இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்த சார்லோட் பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியாக அரியணையில் அமரவிருக்கிறார். பெண் குழந்தைகளின் வரிசையில் இளவரசி சார்லோட் முதலில் இருப்பதால், அரச குடும்பத்தின் முதல் பெண் அரசியாகவிருக்கிறார்.