பதட்டங்களுக்கு மத்தியில் சீனாவில் உளவு பார்த்த அமெரிக்காவின் ‘டிராகன் லேடி’! ஆதாரத்தோடு வெளியான புகைப்படம்!!

305

சீன……..

சீன வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் பறந்ததாக the South China Sea Probing Initiative தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, அமெரிக்கா-சீனா இடையேயான உறவு நாளுக்கு நாள் மோ சமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திங்க் டேங்க் வெளிப்படுத்திய விமானத் தகவல்களின்படி, ‘டிராகன் லேடி’ என அழைக்கப்படும் Lockheed U-2A உளவு விமானம் தென் கொரியாவில் புறப்பட்டு, தைவான் ஜலசந்தியின் மீது பறந்து, சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் வழியாக சென்றது என செயற்கைக்கோள் படத்துடன் வெளியிட்டுள்ளது.

தைவான் ஜலசந்தியில் இதுவரை இல்லாத அளவில் மிக நெ ருக்கமாக பறந்த அமெரிக்க உளவு விமானம் இது என the South China Sea Probing Initiative குறிப்பிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் சீனாவுக்கு அருகில் இயக்கிய உளவு விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்கா கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது என்று கடந்த மாதம் திங்க் டேங்க் வெளிப்படுத்தியது.

அதன் தரவுகளின்படி, அமெரிக்க விமானப்படை தென் சீனக் கடலில் ஆண்டுக்கு 1,500 முறை பயணம் மேற்கொள்கிறது என தெரிவித்துள்ளது. பயணிகள் விமானங்களை இயக்குவதன் மூலம் அமெரிக்கா தனது உளவு விமானங்களை மறைக்கிறது என்றும் திங்க் டேங்க் கூறியது.