சுவிஸில் தோன்றியபடியே மாயமாக மறைந்த மர்ம தூண்! உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள சம்பவத்திற்கு பின்னணியில் யார்? நீடிக்கும் மர்மம்!!

303

சுவிட்சர்லாந்தில்………..

சுவிட்சர்லாந்தில் தோன்றிய மர்ம தூண் தோன்றியபடியே மாயமாக மறைந்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 18ம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது.

இதனையடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, பிரித்தானியா, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, போலந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் தெரியவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட தூண்களில் சில மர்மமான முறையில் மாயமானது.

அந்த வரிசையில் புதன்கிழமை சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணம் Gränichen நகரில் உள்ள Liebegg கோட்டைக்கு வெளியே மர்ம உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தூண் பனியால் சூழப்பட்டிருந்தால் அதன் அருகே கால்தடங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஒரு நாள் கழித்து Liebegg கோட்டைக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட தூண் தோன்றியபடியே மர்மமாக மறைந்துவிட்டது. இது Netflix-ன் ‘பிளாக் மிரர்’என்ற தொடரின் விளம்பரம் என வதந்திகள் பரவி வருகின்றன.

நியூ மெக்ஸிகோவில் உள்ள ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற கலைக் குழு, யூட்டாவில் தூணை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

ஆனால் மற்ற நாடுகளில் தாங்கள் நிறுவவில்லை என தெரிவித்துள்ளது. உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த மர்ம தூண்களை நிறுவியது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.