சூட்கேஸை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்…!

211

ரஷ்யா……..

ரஷ்யாவை சேர்ந்தவர் ரெய்ன் ஜார்டன்.24 வயதாகும் இவர் சூட்கேஸை திருமணம் செய்துள்ளார்.சிறுவயது முதலே இவருக்கு பொருட்களின் மீது அதீத பற்று இருந்து வந்துள்ளது. இதனால் அவர் சூட்கேஸை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரெய்ன் ஜார்டன் கூறியதாவது எனக்கு ஓர் ஆணின் மீதும் விருப்பம் இருந்தது.ஆனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் சூட்கேசுடன் காதல் வயப்பட்டு விட்டேன்.அதனால் தான் சூட்கேஸை திருமணம் செய்து கொண்டேன்.

என்னுடைய கணவன் சூட்கேஸை முதன்முதலாக 2015ம் ஆண்டு தான் பார்த்தேன்.ஓர் போட்டோஷுட்க்காக அதனை கடையில் இருந்து வாங்கினேன்.

அப்போதே நன் சூட்கேசின் மீது காதலில் விழுந்துவிட்டேன்.எனது சூட்கேஸ் கணவரின் பெயர் ஜிடியான்.நானும் அவரும் பேசிக் கொள்வோம். அவர் எனக்கு சிறந்த துணை மட்டுமல்ல. நல்ல கணவர், நண்பர் என்று சொல்லலாம். ஆனால் பலர் என்னை புரிந்து கொள்வதில்லை.

நான் உடல் மற்றும் மனநலம் சரியில்லாதவள் எனவும் சிகிச்சை பெற வேண்டும் எனவும் கூறுகின்றனர்.மக்கள் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.உங்களுக்கு தெரியாத ஒன்றை வைத்து மனிதர்களை தீர்மானிக்க கூடாது என கூறியுள்ளார்.