பிரித்தானியாவில் மாயமாக மறையும் நான்காவது மர்ம தூண் கண்டுபிடிப்பு!!

266

பிரித்தானியா…….

பிரித்தானியாவில் நான்காவதாக Merry Maidens stone circle நடுவில் மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18ம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது.

இதனையடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, பிரித்தானியா, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் அங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் தெரியாததால் மர்மம் நீடிக்கிறது.

பிரித்தானியாவில் ஏற்கனவே Dartmoor, the Isle of Wight மற்றும் Glastonbury Tor பகுதிகளில் தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது Merry Maidens stone circle நடுவில் நான்காவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தூணை கண்டு அதிர்ச்சி மற்றும் பிரமிப்படைந்தேன். இது ஒரு அழகான பொருள் எனவும் Luke Brown Photo தெரிவித்துள்ளார்.