கொரோனாவை அழிக்கும் எல்இடி பல்ப்கள்: ஆய்வில் வெளியான தகவல்!!

248

எல்இடி பல்ப்கள்………

இந்த உலகமே கொரோனாவை வைரஸை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது.

இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸை எல்இடி பல்ப்கள் அ ழி த்துவிடும் என புதிய ஆய்வு முடிவு ஒன்று சொல்கிறது.

இஸ்ரேல் நாட்டின் அவிவ் பல்கலைக்கழகத்தில் ஹடாஸ் மாம்னே என்பவர் சமர்பித்த ஆய்வறிக்கையில் எல்இடி பல்ப்கள் மூலம் கொரோனா வைரசை அ ழி க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் எல்இடி பல்ப்களிலிருந்து யூவி கதிர்கள் வெளியாகின்றன. அது கொரோனா வைரஸை கொல்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏசி மற்றும் தண்ணீர் குழாய்களில் இந்த எல்இடி பல்ப்களை அமைப்பது மூலம் அதிலிருந்து வெளியாகும் யூவி கதிர்கள் வெளியில் பரவிக் கிடக்கும் கொரோனா வைரஸை கொல்லும், அதே நேரத்தில் இதை நாம் குறைந்த விலையிலும் செய்ய முடியும். அத்துடன் இதை தாங்கள் முயற்சி செய்து பார்த்து வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதிலிருக்குக்கும் ஆ பத் து என்னவென்றால் யூவி கதிர்களை வெளியிடும் எல்இடி பல்ப்களை பொறுத்திவிட்டு அதை மனிதர்கள் நேரடியாக தங்கள் உடலில் பெற்றால் அவர்களுக்குப் பா தி ப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

இதன் காரணமாக இந்த முறையில் கொரோனாவை அ ழிப் பது சற்று கடினம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.