நேரலையில் ஒரு ஆண் நபரை வர்ணித்த தொகுப்பாளினிக்கு நேர்ந்த கதி!!

545

குவைத்தில் தொகுப்பாளினி ஒருவர் தன்னுடன் பணியாற்றம் சக ஊழியரை பார்த்து நீங்கள் ஹேண்ட்சம் என்று வர்ணித்த காரணத்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிகொண்டிந்ந்த தொகுப்பாளினி, பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார்.

அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை சரி செய்தார். அதற்கு தொகுப்பாளினி, நீங்கள் இப்போது அழகாக தான் உள்ளீர்கள். அதனால் தலைப்பாகையை சரி செய்ய வேண்டாம், நீங்கள் ஹேண்ட்சம் என வர்ணித்துள்ளார்.

இவர், பயன்படுத்திய ஹேண்ட்சம் என்ற வார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த தொகுப்பாளினியை பத்திரிகை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.