தேனிலவின் போது மெர்க்கலின் உள்ளாடையை திருடிய சிறுவன்: வெளியானது முதல் கணவருடனான புகைப்படங்கள்!!

608

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் புதுமணத்தம்பதியினர் எங்கு தேனிலவு செல்கிறார்கள் என்ற செய்தி ரகசியமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு தனது முதல் கணவர் Trevor Engelson – உடன் நியூசிலாந்துக்கு தேனிலவு சென்ற புகைப்படம் மற்றும் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் தனது தேனிலவு குறித்து பகிர்ந்துகொண்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

நியூசிலாந்து ரேடியோ நிகழ்ச்சியில் மெர்க்கல் பேசியதாவது, glaciers, seal colonies மற்றும் wineries ஆகிய இடங்கள் மிக அருமையாக இருந்தது.

டால்பின் மீனுடன் இணைந்து மாலைப்பொழுதில் நீச்சல் அடித்தேன். நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. தேனிலவின் போது எனது உள்ளாடையை 13 வயது சிறுவன் திருடினான். அவனை உடனே கண்டித்து அவனது பெற்றோரிடம் இந்த தகவலை தெரிவித்தேன் என தனது தேனிலவு குறித்து இவர் பகிர்ந்துகொண்ட தகவல் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.