60 பெண்கள் பாலியல் வன்கொடுமை : 250 பெண்களை வீடியோக்கள் எடுத்த நபர் : தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!!

1144

விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் மதினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பெண்களை ஆபாச படம் எடுத்ததாகவும், அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகள் பறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

60 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், 250 பெண்களின் வீடியோக்கள் பொலிசாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கியல் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த கும்பலுக்கும், ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வந்து புகார் அளிக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரையடுத்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என மனு அளித்துள்ளார்.

மேலும், ஆளும் கட்சியின் அழுத்தம் இருப்பதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது, யார் குற்றம் செய்தாலும் அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும் என மகேந்திரன் கூறியுள்ளார்.