60 வயது பிரபல நடிகருக்கு ஜோடியாகும் அமலாபால்?

362

அமலாபால்….!

ரஜினி கமல் போன்ற 60 வயதுக்கும் மேற்பட்ட மாஸ் நடிகர்களுக்கு இளம் நடிகைகள் ஜோடியாக நடிப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் மற்றொரு 60 வயதான பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க நடிகை அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அமலாபால், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை போயபட்டி ஸ்ரீனு என்பவர் இயக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களில் ஒருவர் அமலாபால் என்றும், அமலாபாலிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

அமலாபால் நடித்து முடித்த ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமலாபால் தற்போது மலையலத்தில் ‘ஆடுஜீவிதம்’, தமிழில் ‘கேடவர்’, தெலுங்கில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப்சீரீஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது