கின்னஸ் சாதனை படைத்த இகுவானா..! எவ்ளோ வயது தெரியுமா?

396

இகுவானா காண்டாமிருகம்…

உலகில் உயிர் வாழும் அதிக வயதான இகுவானா கா ண் டாமிருகம் என்ற பெயரை, ஆஸ்திரேலிய மிருகக்காட்சி சாலையில் வாழும் இகுவானா பெற்றுள்ளது. சராசரியாக 17 ஆண்டுகள் மட்டும் ஆ யு ளை இகுவானா பெ ற் றிருக்கும் நிலையில், இதற்கு 41 வயதாம்..

இகுவானா வகையைச் சேர்ந்த கா ண் டாமிருகங்கள், பொதுவாக 16 முதல் 17 ஆண்டுகள் வரை மட்டுமே வா ழும். ஆனால், ஆஸ்திரேலியா நாட்டில், குயின்ஸ்லாந்து மி ரு கக்கா ட்சி சா லையில் வளரும் இகுவானா காண்டாமிருகம், சமீபத்தில் தனது 41வது வயதை பூர்த்தி செ ய் த து.

இந்த இகுவானா 1980 பிப்ரவரி 23ஆம் தேதி சிட்னியில் உள்ள டாரன்கா உயிரியல் பூங்காவில் பிறந்தது. தனது 13 வயது வரை அங்கு வளர்ந்த இந்த இகுவானா, 1993 ஆம் ஆண்டு, குயின்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலைக்கு மா ற் றுப்பட்டு, தற்போது வரை அங்கு வாழ்ந்து வருகிறது.

இதற்கு முன்னர் 23 வயது வரை வாழ்ந்த ஒரு இகுவானா, அதிக நாள் உயிர்வாழும் இகுவானா என்ற சாதனையை படைத்திருந்த நிலையில், அந்த சாதனை தற்போது மு றி ய டி க்க ப்பட்டுள்ளது. இதற்காக கொடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை சான்றிதழுடன், இகுவானாவின் புகைப்படத்தையும், குயின்ஸ்லாந்து மிருகக்காட்சி சாலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நெட்டிசன்கள், லைக்ஸ்களையும் குவித்து வருகின்றன.

இந்த புகைப்படத்தை, டிவி பிரபலமும், மிருகக்காட்சி சாலையில் பணிபுரியும் பின்டி இர்வினும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இகுவானா தனக்கு பிரியமான உணவான செம்பருத்தி பூக்களை சாப்பிட்டுக் கொ ண் டி ரு க் கி றது. நமது வாழ்த்துக்களையும் சேர்த்து அந்த இகுவானாவுக்கு பதிவு செய்வோம்.