தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு டாடா.. தளபதி66-க்கு தெலுங்கு நிறுவனத்திடம் 10 கோடி அட்வான்ஸ் வாங்கிய விஜய்!!

383

விஜய் தளபதி 66…….

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி விஜய் கால்ஷீட் தருவார் என நம்பி ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கிய நிலையில் தற்போது விஜய் தளபதி 66 படத்திற்காக வேறு ஒரு நிறுவனத்திடம் விலை போய் விட்டாராம்.

தளபதி விஜய் என்றாலே வசூல் மழை தான் என்பதை போல இருக்கிறது அவரது சமீபத்திய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்கள். இவ்வளவு ஏன் 1008 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியான மாஸ்டர் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த தைரியம் தான் தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் தயாரிக்க உந்துகோலாக அமைகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தளபதி 65 படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் தளபதி 66 படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டாராம்.

அந்த வகையில் முன்னதாக தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது விஜய்யின் தளபதி 66 படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக மைத்திரி மூவி மேக்கர்ஸ். இதற்காக விஜய் 10 கோடி அட்வான்ஸ் வாங்கி விட்டதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே ஊரடங்கு சமயத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேரடி தெலுங்கு படம் ஒன்றுக்காக லோகேஷ் கனகராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஓகே பண்ணி வைத்தது குறிப்பிடத்தக்கது.