1 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட காதலியின் கவர்ச்சி உருவ கேக்! ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த காதலன்!!

596

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோபி என்பவர் கேக் செய்வதில் வல்லவர். இவரின் வாடிக்கையாளர் ஒருவர், அவரது காதலிக்கு பிறந்தநாள் பரிசாக காதலியின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்குமாறு டோபியிடம் கேட்டுள்ளார்.

கேக் செய்து கொடுக்க ஒப்புக் கொண்ட டோபி, அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லேடி சூப்பர்ஸ்டார் கிம் ஹர்தாஷியன் உருவத்தைப் பொன்று வாடிக்கையாளரின் காதலி இருந்ததால், டோபி கிம்மை மாடலாக வைத்து கேக் செய்துள்ளார்.

இருவருக்கும் உள்ள ஒற்றுமையை காட்ட இந்த கேக் உதவும் என நம்பினார்.இந்நிலையில், இந்த கேக்கிற்காக ரைஸ் கிரிஸ்பிஸ், மார்ஸ்மெல்லோ -9 கிலோ சாக்லேட் 15 கிலோ பயன்படுத்துப்பட்டுள்ளது. இந்த கேக்கிற்கு கருப்பு ஐசிங் கொடுக்கப்பட்டு 2017ல் என்பிசி யூனிவர்சல் அணிந்திருந்த உடையை மாடலாக எடுத்து செய்திருந்தார்.

கேக்கிற்கான முகம் இதற்கென ஸ்பெஷலான 3டி அச்சிடும் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நகம், புருவம் கண்கள் கன்னமென ஒவ்வொன்றும் நுணுக்கமாக செய்துள்ளனர். வைர நகையை தவிர்த்து இந்தகேக் முழுமையும் சாப்பிடுவதற்கு ஏற்றதே.

இந்த கேக்கிற்கான செலவு 1.2 மில்லியன் டொலர். வைரத்தின் செலவு தான் மிக அதிகம். இந்த கேக் டோபி செய்த முந்தைய கேக்கின் சாதனையை முறியடித்துள்ளது.

இத்தனை அலங்காரமான கேக்கை வெட்டி சாப்பிட மனசு வருமா? அதனால இதோட மினியேச்சர் வெர்ஷன் செய்து அதை கட் பண்ணி ருசிபார்த்திருக்காங்க. எப்பிடியோ லவ்வர்ஸ் ரொம்ப ஹேப்பிங்க….