முதலில் நாட்டையே உலுக்கிய விமான விபத்து… பின்னர் பேருந்து விபத்து : உ.யிர் த.ப்பிய அதிசய பிறவி!!

228

பொலிவியா நாட்டில்..

பொலிவியா நாட்டில் 21 பேர் ப.லியான பேருந்து விபத்தில் இருந்து கா.யங்கள் ஏதுமின்றி 30 வயது நபர் உ.யிர் த.ப்பியுள்ளார். பொலிவியா நாட்டவரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடந்து கொடூர பேருந்து விபத்தில் இருந்து அதிசயமாக உ.யிர் த.ப்பியுள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 150 அடி பள்ளத்தில் க.விழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகள் 21 பேர் உ.ட.ல் ந.சுங்கி ம.ரணமடைந்துள்ளதுடன், பலர் கா.யங்களுடன் உ.யிர் த.ப்பியுள்ளனர்.

ஆனால் துரிமி மட்டும் எந்த கா.யங்களும் இன்றி விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து, தவழ்ந்து வெளியேறியுள்ளார். விமான தொழில்நுட்ப வல்லுநரான துரிமி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விமான விபத்து ஒன்றில் சி.க்கினார்.

குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட Chapecoense கால்பந்து அணியின் பெரும்பாலான வீரர்கள், அணி நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள் என இந்த விபத்தில் ப.லியாகினர்.

மொத்தம் 71 பேர் ப.லியான அந்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே கா.யங்களுடன் உ.யிர் பிழைத்தனர். கொலம்பியா நாட்டை உலுக்கிய அந்த விமான விபத்திலும் துரிமி கா.யங்களின்றி, அதியசமாக உ.யிர் த.ப்பியிருந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு, பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த துரிமி, அசதியால் தூங்கிப்போயுள்ளார். திடீரென்று பயணிகளின் அ.லறல் ச.த்தம் கேட்டு கண் விழித்ததாகவும், பேருந்து அப்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் துரிமி தெரிவித்துள்ளார்.

சமயோசிதமாக நடந்து கொண்டதால், பேருந்து விபத்தில் இருந்து தாம் உ.யிர் த.ப்பியதாகவும் துரிமி தெரிவித்துள்ளார். த.லையில் மட்டும் லேசான கா.யம் எனவும், அது சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.