கொழுப்பு படியாமல் தடுக்கும் உணவுகள்: கட்டாயம் சாப்பிடுங்கள்!!

805

ரத்த நாளங்கள் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று, ஏனெனில் எப்போதுமே நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஒருவேளை கொழுப்புத் திட்டுக்கள் ரத்த நாளங்களில் படிய ஆரம்பத்தால், மாரடைப்பு பக்கவாதம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதனை தடுக்க சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

பூண்டு

பூண்டு ரத்த நாளங்களை சுத்தப்படுத்தவும், இதயம் தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கவும் உதவுவதால் உணவில் அதிகமாக சேர்த்துக் கொளலாம்.

இல்லையெனில், ஒரு டம்ளர் தண்ணீரில் 4-5 பூண்டினை சிறிது சிறுதாக நறுக்கி கொதிக்க வைத்து அந்த நீரை ஆறியதும் குடித்து வரலாம்.

மாதுளம்பழம்

மாதுளம்பழத்தில் விட்டமின் C மற்றும் பாலிபினால் உள்ளது, இவை சிறந்த ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த நாளங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

சால்மன்

இதயத்திற்கு சால்மன் வகை மீன்கள் மிகவும் நல்லது, இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமங்களை அகற்ற பெரிதும் உதவுகிறது.

இதில் ஆரோக்கியமான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறையவே இருக்கிறது. அதனால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

அவகேடோ

அவகேடோவில் விட்டமின் E நிறைய இருக்கிறது. இவை கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தப் பிரச்சனை வராமல் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் அமினோ அமிலம் மற்றும் எல் சிட்ருலின் ஆகியவை உள்ளது. இவை ரத்த அழுத்த்தத்தை சீராக்கி, நம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க பெரும் பங்காற்றுகிறது.