இந்த நேரங்களில் இளநீரை குடியுங்கள்: உடல் எடை குறையுமாம்!!

1032

இயற்கை பானமான இளநீர் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் உள்ளது.

இந்த இளநீரை வெட்டியதும் குடிக்க வேண்டும். இதை பழச்சாறுகளுடன் சேர்த்து கூட குடிக்கலாம். ஆனால் இளநீருடன் சர்க்கரை அல்லது செயற்கை சுவையூட்டிகள் எதையும் சேர்த்துக் குடிக்கக் கூடாது.

நன்மைகள்

இளநீர் தாகத்தைத் தணிப்பதோடு, ஒருவருக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல், பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வறட்சி அடையாமல் பாதுகாத்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இளநீர் கெட்ட கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி வெளியேற்றி, உடல் எடை குறைய உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கிறது.
இளநீரை எப்போது குடிக்க வேண்டும்?

உடற்பயிற்சிக்கு பின் குடிக்கலாம்.
அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
மதிய உணவு அல்லது மதிய உணவிற்கு பின் குடிக்கலாம்.
குறிப்பு

ஒருநாளைக்கு 1-2-க்கு மேல் இளநீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். உடல் எடையும் குறையாது.