நேருக்குநேர் சந்தித்து கர்ஜித்த இரு சிறுத்தைகள்.. நொடியில் சிலிர்த்த பார்வையாளர்கள்!!

363

சிறுத்தைகள்…

கர்நாடகாவின் ஹுன்சூரில் உள்ள கபினி வனவிலங்கு சரணாலயத்தில் அதிகம் காணப்படும் உயிரினங்களில் ஒன்றான சிறுத்தையும், சாயா என்ற பிளாக் பாந்தரும் (கருஞ்சிறுத்தை) சந்தித்து கொ ண்ட காட்சிகள் இணையத்தில் வை.ர.லாகி வருகின்றன.

இன்போசிஸின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் பிளான்தெரபிஸ்ட் ரோஹினி நிலேகனி ஆகியோர் கடந்த மார்ச் 6ம் தேதி இந்த காட்சியை நேரில் கண்டுள்ளனர்.

மேலும் அதனை வீடியோப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்ட நந்தன் நிலேகனி, ” மார்ச் 6, கபினி வனவிலங்கு சரணாலயத்தில் இந்த காட்சிகளைப் பார்த்தேன். பிளாக் பாந்தருக்கும் அதன் எதிரியான ஸ்கார்ஃபேஸ் சிறுத்தைக்கும் இடையிலான மற்றொரு காவிய சந்திப்பு!” என்று கேப்சன் செய்துள்ளார்.

சுமார் 54 விநாடிகள் கொ.ண்ட அந்த வீடியோ கிளிப்பில் இரண்டு பெரிய விலங்கினங்களும் ஒரு மரத்தில் ஒருவருக்கொருவர் எ.திர்கொ.ள்.ளும் காட்சிகள் அடங்கியுள்ளன.

மரத்தின் நடுப்பகுதியில் நின்று கொ.ண்.டிருந்த கருஞ்சிறுத்தை, அதற்கு மேலே ஒரு கிளையில் நின்று கொ.ண்.டிருந்த சிறுத்தையை நோக்கி வேகமாக ஏ.று.வதைக் காணலாம்.

மேலும் இரு சிறுத்தைகளும் நேருக்குநேர் சந்தித்து கர்ஜிக்கும் அந்த நொடி காண்போரை சிலிர்க்க வைக்கிறது.