இன்றைய நாளுக்கான ராசிபலன் (05-04-2021) உங்களுக்கு எப்படி ?

245

இன்றைய ராசிபலன்………….

மேஷம்

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுபெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் செயல்களில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப்
பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பிஏமாற வேண்டாம்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில்வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில்மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்
தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவுஉயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அறிவுத்திறன் பெருகும் நாள்.

கன்னி

கன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும். திடீர்பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். புதிய பாதைதெரியும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அரசுவிவகாரியங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் விவாதம் வேண்டாம்.எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழையகடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கை வைத்திருந்தஇடத்தில்இருந்து நல்லசெய்தி வரும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.லாபம் பெருகும் நாள்.