தகாத உறவை தக்கவைக்க கள்ளக்காதலுனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்த தாய்!!

254

அரியலூர் மாவட்டத்தில் தகாத உறவை தக்கவைத்துக்கொள்வதற்காக தனது கள்ளக்காதலுக்கு 16 வயது இளம்மகளை தாய் திருமணம் செய்துவைத்துள்ளார்.

ராஜூ (25) என்ற கூலித்தொழிலாளிக்கு சத்யா (32) என்ற பெண்மணி தனது 16 வயது மகளை கட்டாயப்படுத்தி கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துவைத்துள்ளார்.

இந்நிலையில் மருமகனுக்கும், சத்யாவிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. இதனை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, ராஜூவை தஞ்சாவூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் குழந்தையை பார்த்து கொள்வதற்கு சத்யாவை வரச்சொல்லுமாறு ராஜூ மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜூ, மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி வந்ததோடு மட்டுமின்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து ராஜூவின் மனைவி தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பு கருதி தன்னை சிறு வயதிலேயே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் சத்யா, சத்யாவின் தாய் சாந்தி (48), கணவர் ராஜூ, ராஜூவின் தாய் மாரியம்மாள்(45) ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து ராஜூ, மாரியம்மாள், சத்யா, சாந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.