சிக்கன் கறி சமைக்காததால் பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்!!

118

இந்தியாவில் தாய் சிக்கன் கறி சமைக்காததால் அவரை கொடூரமாக கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கிஷோர் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துள்ளார்.

இதனால் மனைவி தனது குழந்தைகளுடன் கிஷோரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தனது தாய் மாரியம்மாவுடன் கிஷோர் வசித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் வெளியிலிருந்து வீட்டுக்கு கோழியுடன் வந்த கிஷோர், தனக்கு சிக்கன் கறியை தயார் செய்து வைக்கும்படி மாரியம்மாவிடம் சொல்லிவிட்டு மதுகுடிக்க சென்றுள்ளார்.

பின்னர் மது போதையில் கிஷோர் வீட்டுக்கு வந்து சிக்கன் கறி வேண்டும் என மாரியம்மாவிடம் கேட்ட போது தான் இன்னும் சமைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த கிஷோர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாய் மாரியம்மாவை சரமாரியாக குத்தி துடிதுடிக்க கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்து கிஷோர் தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மாரியம்மாவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் கிஷோரை தேடி வருகிறார்கள்.