இன்றைய நாளுக்கான ராசிபலன் (13-06-2021) உங்களுக்கு எப்படி ?

567

இன்றைய ராசிபலன்……………………..

மேஷம்

மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.

துலாம்

துலாம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள் .எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடமை உணர்வுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினர் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டதுதுலங்கும் நாள்.

மீனம்

மீனம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.