புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ரைசா!!

707

விளம்பர மொடலாகவும், ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்த ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் தற்போது திரைப்படத்தில் கதாநாயகியாகியுள்ளார்.

பிக்பாஸில் சக போட்டியாளரான ஹரிஸ் கல்யானுடன் “பியார் பிரேமா காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பாடல் காட்சிகள் அசர்பைஜான் எனும் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் அங்குள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்த ரைசா, சுவரில் வரையப்பட்டிருந்த கவர்ச்சியான பெண்ணைப் போலவே போஸ்கொடுத்து அப்புகைப்படத்தினை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை அவதானித்த சிலர் வரையப்பட்டிருந்த ஓவியம் அவரைப் போலவே இருப்பதாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், பல ரசிகர்கள் அவர் கொடுத்திருந்து போஸ் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவரது சில தீவிர ரசிகர்கள் “நீங்கள் ஆபாச பட நடிகை கிடையாது, தயவு செய்து புகைப்படத்தை நீக்கிவிடுங்கள்” வேண்டுகோள் விடுத்துள்ளனர்.