குஜராத்தில் சபர்மதி ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிப்பு!!

473

கொரோனா வைரஸ்………..

ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது, தொற்றின் மூன்றாம் அலை தாக்கும் போது காற்றில் மட்டுமின்றி நீரின் வழியாகவும் வைரஸ் பரவலாம் என்று கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

குஜராத்தின் சபர்மதி ஆறு, சந்தோலா ஏரியிலிருந்து தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இதனை மேற்கொண்டனர்.

அதில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.